சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா, ஜெயம் ரவி மூவருக்கும் சம்பளம் இல்லை.. அப்படி இருந்தும் 'எஸ்கே 25' பட்ஜெட் இத்தனை கோடியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 25வது படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மற்றும் சுதா கொங்காரா ஆகிய மூவரும் சம்பளம் பெறாமல், லாபத்தில் பங்கு பெறுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது, இதுதான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘எஸ்.கே. 25’ படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதில் ஜெயம் ரவி மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும், இந்த படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம், சிவகார்த்திகேயன் படங்களில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் என்றும், சுமார் ரூ.150 கோடி முழு மேக்கிங் செலவிற்காக மட்டுமே செலவிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால், தமிழ் சினிமாவின் தரத்தை கூட்டும் ஒரு சிறப்பான படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மற்றும் சுதா கொங்காரா ஆகிய மூவரும் ஒரு சிறிய தொகையை மட்டுமே முன்பணம் பெற்றுக்கொண்டு, தங்களுடைய சம்பளத்தை லாபத்தில் பங்கு என்று மாற்றிக்கொண்டு இப்படத்தில் இணைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது..
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் அடுத்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments