காஷ்மீர் சென்றது 'SK21' படக்குழு.. இனி வேற லெவலில் படப்பிடிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 21வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ’SK21’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும் அதற்காக படக்குழுவினர் சமீபத்தில் லொகேஷன் பார்த்து திரும்பியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் காஷ்மீருக்கு விமானத்தில் சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இனி வேற லெவல் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எனக்கா ஃபேர்வெல்? ஓய்வு குறித்து டோனியின் கருத்தால் உற்சாகத்தில் மிதக்கும் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தத்துப்பிள்ளையான டோனியின் ஓய்வுக் குறித்த பயத்தில்

அந்த கேமிராமேன் வேலை கொஞ்சம் கிடைக்குமா? ரைசா வில்சன் பீச் போட்டோஷூட்டிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்..!

நடிகை ரைசா வில்சனின் போட்டோஷூட் பீச்சில் நடைபெறும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகி இருக்கும் நிலையில் அந்த கேமராமேன் வேலை தங்களுக்கு கிடைக்குமா? என பலர் காமெடியாக கமெண்ட்ஸ் பதிவு செய்து

மனைவியுடன் அந்தரத்தில் தொங்கும் செல்வராகவன்.. அதிர்ச்சி வீடியோ..!

இயக்குனர் செல்வராகவன் தனது மனைவி கீதாஞ்சலியுடன் அந்தரத்தில் தொங்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

நிறைவு கட்டத்தை நெருங்கிய சூர்யாவின் 'கங்குவா' : இரண்டாம் பாகம் உருவாகுமா?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்ற

12ஆம் வகுப்பு மட்டுமே படித்த சைபர் க்ரைம் நபர்.. தினமும் ரூ.5 கோடி சம்பாதித்தவர் கைது..!

12ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர் ஒரு குழுவை ஏற்படுத்தி தினமும் 5 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி செய்து சம்பாதித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.