காஷ்மீர் சென்றது 'SK21' படக்குழு.. இனி வேற லெவலில் படப்பிடிப்பு..!
- IndiaGlitz, [Thursday,May 04 2023]
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 21வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகி உள்ளன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ’SK21’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும் அதற்காக படக்குழுவினர் சமீபத்தில் லொகேஷன் பார்த்து திரும்பியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் காஷ்மீருக்கு விமானத்தில் சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இனி வேற லெவல் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.