'சிவகார்த்திகேயன் 21' படத்தின் இசையமைப்பாளர் இவரா? அனிருத் என்னாச்சு?

சிவகார்த்திகேயன் நடித்த எட்டு படங்களுக்கு அனிருத் இசையமைத்த நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளர் இந்த படத்திற்கு இசை அமைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின்போது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், தான் தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்பதை அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு முதல் முதலாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதை அடுத்து இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

விக்ரமின் 'மஹான்' படத்தி; சிம்ரன் கேரக்டர்: படக்குழுவினர் அறிவிப்பு!

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடித்த 'மஹான்' திரைப்படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

திடீரென வைரலாகும் சில்க் ஸ்மிதா வீடியோ: என்ன தான் இருக்குது பாருங்களேன்!

தமிழ் திரையுலகின் கவர்ச்சிக்கன்னி என்றால் அது சில்க் ஸ்மிதா தான் என்பதும் அவருக்கு ஈடு இணையாக இன்னும் ஒரு கவர்ச்சி நடிகை இந்திய திரை உலகில் பிறக்கவில்லை என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்து

விஜய் மக்கள் இயக்கம் கேட்ட சூப்பர் சின்னம்: தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன தெரியுமா?

ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்திருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒரே சின்னமாக தேர்தல் ஆணையத்தில்

'பாகுபலி' படத்தில் பணியாற்றியவரின் உயிரை காப்பாற்ற எஸ்.எஸ்.ராஜமெளலி வேண்டுகோள்!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' திரைப்படத்தில் பணியாற்றிய ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு உதவி

விஜய் ஆண்டனி - சி.எஸ்.அமுதன் படத்தில் இணைந்த பிரபலம்!

 தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'தமிழ் படம்' 'தமிழ் படம் 2' உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன், தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் படத்தை இயக்கி