திடீரென டிரண்டுக்கு வந்த சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Friday,June 28 2019]

சிவகார்த்திகேயன் தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தாலும் அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் படம் ரிலீசில் முந்திவிடும்போல் தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் 16வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் அனேகமாக நீண்ட விடுமுறை நாட்கள் உள்ள ஆயுதபூஜை விடுமுறையின்போது வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் வொர்க்கிங் ஸ்டில் ஒன்று சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் திடீரென டிரெண்டுக்கு வந்துள்ளது. இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் நீரவ் ஷா ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன், சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

லாஸ்லியா என்ன சொல்லபோகுதோனுக்கு திக் திக்குனு இருக்கு: பிரபல நடிகையின் டுவீட்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் முதல் நாளில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டும்

இந்திய அணி எங்களை அரையிறுதிக்கு வரவிடாது: பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

இந்திய அணி இனிவரும் போட்டிகளில் வேண்டுமென்றே தோல்வி அடைந்து எங்களை அரையிறுதிக்கு வரவிடாமல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

குழந்தைகளை வன்கொடுமை செய்பவர்களை தூக்கில் போட்டாலும் பயனில்லை: கமல்ஹாசன்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகமாகி வருகிறது

வனிதாவுக்குள்ளும் இவ்வளவு சோகமா? 

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக செண்டிமெண்ட் மழை பொழிந்து வருகிறது. ஏற்கனவே ரேஷ்மா, சேரன், சரவணன், தர்ஷன், மோகன் வைத்யா,

கொலையுதிர் காலம் படத்தின் தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் ஜூன் 14ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தின் டைட்டிலில் வெளியான சுஜாதாவின் 'கொலையுதிர்காலம்'