சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 09 2019]

'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பில் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அவர் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, அந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

சிவகார்த்திகேயன் நடிக்கும் 16வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது

இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனுஇமானுவேல் நடித்து வருகிறார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நட்ராஜ், ஆர்கே சுரேஷ், அர்ச்சனா, பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் சூரி ஆகிய இருவரும் இணைந்து காமெடி கேரக்டர்களில் நடிக்கின்றனர் மிகவும் எதிர்பார்த்து கூறிய இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

நான் ஒரு தமிழ் கலாச்சார பொண்ணு: பியர் குடித்து கொண்டே பதில் கூறிய மீராமிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மீராமிதுன் சக போட்டியாளர்கள் உடன் சண்டை போடாத நாளே இல்லை என்று கூறலாம்.

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை': சூர்யாவின் அசத்தல் ரியாக்சன்

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை ஒரு நெகட்டிவ் விமர்சனம் கூட வெளிவந்ததாக தகவல்கள் இல்லை.

பிக்பாஸ் போட்டியாளரின் ஹனிமூன் புகைப்படங்கள் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 46 நாட்களாக விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக நேற்றைய கஸ்தூரியின் வரவு இந்த நிகழ்ச்சியை கூடுதலாக சுவாரஸ்யமாக்கும்

4 பேர லவ் பண்றது காமெடியா? கவினை கலாய்த்த கஸ்தூரி

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த முக்கோணக் காதல் மற்றும் சோக காதல் ஆகியவற்றால் பார்வையாளர்கள் சோர்ந்து போயிருந்த நிலையில் திடீரென கஸ்தூரியின் வரவு சுறுசுறுப்பாக்கி உள்ளது.

தனுஷின் 'அசுரன்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் 'அசுரன்'