சிவகார்த்திகேயன் - பிஎஸ் மித்ரன் பட டைட்டில் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,March 12 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 1 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் 'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு படமும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் - பிஎஸ் மித்ரன் இணைந்த 'எஸ்.கே 15' திரைப்படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படவுள்ளது. இதனை கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. நாளை பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கும் நாள் என்றும், பூஜையின்போதே இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவிருப்பதாகவும் தெரிகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியர்தர்ஷன் நடிக்கவுள்ள இந்த படம் யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஜார்ஜ் ஒளிப்பதிவில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் மற்றும் 'நாச்சியார்' நடிகை இவானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.