2020க்கு தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Friday,May 17 2019]

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதனையடுத்து அவர் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம், 'இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்கே 14' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சயின்ஸ்பிக்சன் படமான இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படம் அடுத்த ஆண்டு அதாவது 2020ல் தான் வெளியாகும் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் தனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் மருத்துவர் பரிதாப பலி

இந்த தலைமுறையின் கலாச்சாரங்களில் ஒன்றாகிய செல்பியால் உயிரிழப்பு உள்பட பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஆந்திராவை சேர்ந்த பெண் மருத்துவர்

அனுமதி மறுத்தாலும் பரப்புரை தொடரும்! கமல்ஹாசன்

கமல்ஹாசன் இன்று சூலூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், அனுமதி மறுத்தாலும் எனது பரப்புரை தொடரும் என்று டுவிட்டரில்

கார்த்தி-ஜோதிகா படத்தில் இணைந்த இன்னொரு நாயகி!

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை 'பாபநாசம்' இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்து மதம் மீது திராவிடர்களுக்கு பயம் ஏன்? நடிகை கஸ்தூரி விளக்கம்

கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடிக்கும் நாத்திகவாதிகளும் பகுத்தறிவாதிகளும் ஒட்டுமொத்தமாக கடவுள் இல்லை என்று கூறுவதில்லை.

கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் விபச்சார புரோக்கர்கள்! 1 மணி நேரத்திற்கு, 10 ரூபாய்! அதிர வைக்கும் தகவல்!

பார்ட் டைம் என்கிற பெயரில் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளையும் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் மாணவிகளையும் குறிவைத்து,