பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா

  • IndiaGlitz, [Tuesday,August 20 2019]

எஸ்.ஜே.சூர்யா நடித்த 'மான்ஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'மாயா' இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் 'இறவைக்காலம்' என்ற படத்திலும் அமிதாப்பச்சனுடன் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தரமான குடும்பப்பாங்கான படங்களை இயக்கி வரும் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். இந்த தகவலை இயக்குனர் ராதாமோகனும் உறுதி செய்துள்ளார்.

குடும்பம், செண்டிமெண்ட், நட்பு கலந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இயக்குனர் ராதாமோகன் தெரிவித்துள்ளார்