இளையதளபதியுடன் மீண்டும் இணையும் எஸ்.ஜே.சூர்யா?

  • IndiaGlitz, [Saturday,December 31 2016]

இளையதளபதி விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி திரைப்படம் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது. இந்த படம் வெளிவந்து 16 ஆண்டுகள் ஆகியபோதிலும் மீண்டும் அவர் விஜய்யுடன் இணையவில்லை. விஜய்யின் 'நண்பன்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தபோதிலும் இருவரும் இணைந்து வரும் காட்சிகள் இல்லை. ஆனால் விரைவில் விஜய் படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவுள்ளதாக அவ்வப்போது செய்திகள் மட்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றது,.

இந்நிலையில் விஜய் நடிக்கவுள்ள 61வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா, மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் அவர் நடித்தால் அவருக்கு என்ன கேரக்டராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே 'விஜய் 61' படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது என்பது தெரிந்ததே.

More News

இந்த வேலையை செய்து சாவதை விட, சாப்பிடாமல் செத்துப்போகலாம் : பா.ரஞ்சித் ஆவேசம்

மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கம் ஒன்று மதுரையில் நடைபெற்றது...

பொதுச்செயலாளர் பதவியை ஏற்கும் முன் 3 தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சசிகலா

அதிமுக பொதுக்குழு நேற்று கூடி, அடுத்த பொதுச்செயலாளர் சசிகலா என ஒருமனதாக தேர்வு செய்தது...

விஜய்யுடன் இணைவாரா மணிரத்னம்?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படத்தின் டிரைலர் வரும் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

சசிகலாவை முதன்முதலில் பேட்டி எடுத்தவரின் வித்தியாசமான அனுபவங்கள்

ஜெயலலிதாவின் தோழியாக சசிகலாவை தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஊடகங்கள் உள்பட...

'ஜல்லிக்கட்டு' குறித்து சிம்புவின் தைரியமான கருத்து

சிம்பு என்றாலே ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை எதிர்விளைவுகள் குறித்து கவலைப்படாமல் பேசுபவர் என்பது அனைவரும் அறிந்ததே...