எனது நடிப்பிற்கு மிகப்பெரிய விருது கிடைத்துவிட்டது: எஸ்.ஜே.சூர்யா டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்தை பார்த்த திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் சிம்புவை அடுத்து இந்த படத்தில் நடிப்பிற்காக பாராட்டுகளை பெற்று வருபவர் எஸ்ஜே சூர்யா என்றால் அது மிகையாகாது. மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் சிறப்பான நடிப்பு இந்த படத்தை வேற லெவல் கொண்டு போய்விட்டது என்று வெங்கட்பிரபு அவர்களே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று ’மாநாடு’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு தொலைபேசி மூலம் பாராட்டு தெரிவித்தார் என்பதை பார்த்தோம். அதேபோல் எஸ்ஜே சூர்யாவுக்கும் தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் தனது பாராட்டைத் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய எஸ்.ஜே சூர்யா, ’இன்று எனது நடிப்பு திறமைக்காக எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததாக உணர்கிறேன். ரஜினிகாந்த் அவர்களின் அன்பான பாராட்டு இந்த திரையுலக பயணத்தை எதிர்கொள்ள பெரும் பலத்தை அளிக்கிறது’ என்று அவர் கூறியுள்ளார்.
Today I feel that I got the greatest award for my acting skill ?????? got a call from our SUPER STAR @rajinikanth sir ???????????????? “SIR, U Made My decade sir ????????????????????????Ur kind appreciation giving me a great strength to face this journey ??????????????sjsuryah
— S J Suryah (@iam_SJSuryah) November 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments