நம்ம படம் உண்மையிலேயே ரிலீஸ் ஆகுதுங்க: எஸ்.ஜே.சூர்யா டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
எஸ்ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
இதன்பின் நீதிமன்றத்தின் தடை உத்தரவு ஏற்பட்டாலும் அந்த தடை உத்தரவு தற்போது சரி செய்யப்பட்டு மீண்டும் இந்த படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த படம் மார்ச் 5ஆம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது தெளிவான முடிவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இதுகுறித்து எஸ்ஜே சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் டுவிட்ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மற்றும் ரேடியன்ஸ் மீடியா இடையே இருந்த பிரச்சனை நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது என்றும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வெளியாக காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி என்றும், நம்ம படம் உண்மையிலேயே ரிலீஸ் ஆகுதுங்க’ என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
Issue Between Radiance Media and Escape Artists is Sorted , just got cleared by the court THX A LOT TO ALL THE FANS WHO HAVE BEEN PRAYING AND WAITING FOR THIS RELEASE #NenjamMarapathillai NAMMA PADAM UNMAYAVE RELEASE AHUDHUNGA ????@selvaraghavan @thisisysr @Madan2791 @Arvindkrsna
— S J Suryah (@iam_SJSuryah) March 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com