close
Choose your channels

இந்த படம் என்னை நிச்சயம் ஸ்டார் ஆக்கும்: எஸ்.ஜே.சூர்யா பேட்டி

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்ஜே சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் நீண்ட தாமதத்திற்குப் பின்னர் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. மார்ச் 5ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்தப் படத்தை எஸ்.ஜே சூர்யா மற்றும் என்று படக்குழுவினர் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்முடன் எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்து கொண்டார். ‘நான் ஏற்கனவே கூறியபடி ’இறைவி’ திரைப்படம் என்னை நல்ல நடிகராக்கும் ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் என்னை ஸ்டார் ஆக்கும் என்று கூறியிருந்தேன். அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியானால் கண்டிப்பாக நான் ஸ்டார் ஆவேன் என்று கூறினார்.

மேலும் ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் இயக்குனர் செல்வராகவன் அவர்களுடன் பணி புரிவது கொஞ்சம் கடினம் தான். ஏனெனில் அவர் எல்லாமே பிக்ஸ் செய்து வைத்திருப்பார். எதையும் மாற்ற மாட்டார். அவர் என்ன நினைத்தாரோ நினைத்தது வரும்வரை நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களை விடமாட்டார். இந்த அளவுக்கு ஒரு முழுமையான இயக்குனரை நான் பார்த்ததே இல்லை. இருப்பினும் அவருடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது என்று கூறினார்.

மேலும் இந்த படத்தில் 3 இயக்குனர்கள் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தில் நடித்த நான் ஒரு இயக்குனர், செல்வராகவன் ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் ஒரு இயக்குனர். எனவே மூன்று பேரையும் திருப்தி படுத்தும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது என்பது தான் இதன் சிறப்பு என்று கூறினார்.

மேலும் ’நெஞ்சம் மறப்பதில்லை’ குறித்து எஸ்ஜே சூர்யா மனந்திறந்து கூறியது என்னவென்பதை இந்த வீடியோவில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment