ராகவா லாரன்ஸ் யாரை கைகாட்டினாலும் எனக்கு ஓகே தான்: எஸ்ஜே சூர்யா வீடியோ வைரல்.!

  • IndiaGlitz, [Saturday,April 27 2024]

மே ஒன்றாம் தேதி ராகவா லாரன்ஸ் யாரை கை காட்டுகிறாரோ அவருக்கு உதவி செய்ய தயார் என எஸ்ஜே சூர்யா வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் ’ஜிகர்தண்டா’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த நிலையில் இருவரும் நண்பர்களாகி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மே ஒன்றாம் தேதி ’மாற்றம் ’என்ற புதிய முயற்சியை ராகவா லாரன்ஸ் தொடங்க இருக்கும் நிலையில் அவரிடம் உதவி பெற்றவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் ஒரு அருமையான நிகழ்வு அன்றைய தினம் தொடங்க உள்ளது.

ராகவா லாரன்ஸ் அவர்களின் இந்த முயற்சிக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’ஜிகர்தண்டா’ படத்தில் நடித்த போது மாஸ்டரும் நானும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம் என்றும் அவர் எனக்கு நண்பராக கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

மேலும் மே 1ஆம் தேதி மாற்றம் என்ற ஒரு அமைப்பை ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி என்றும் அன்றைய தினம் அவர் யாரை கை காட்டுகிறாரோ அந்த நபருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் என்றும் எஸ் ஜே சூர்யா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.