புதிய காதல் உலகத்திற்கு எங்களை அழைத்து செல்கிறார்.. அடுத்த பட இயக்குனர் குறித்து எஸ்ஜே சூர்யா...!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா தனது அடுத்த பட இயக்குனர் தங்களை புதிய காதல் உலகிற்கு அழைத்துச் செல்கிறார் என்று கூறியதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யா, ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் மற்றும் நான் ஆகிய மூவரும் இந்த படம் குறித்து அதிகாலை 3 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம், விக்னேஷ் சிவன் கூறிய ஒவ்வொரு காட்சியும் மிகவும் அபாரமாக இருந்தது, எங்களை ஒரு புதிய காதல் உலகிற்கு அழைத்துச் செல்ல மிகுந்த கவனம் செலுத்தி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் நாங்கள் படப்பிடிப்பில் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். எஸ் ஜே சூர்யாவின் இந்த பதிவை அடுத்து இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
😘LIC🥰 - “Love Insurence Corporation” …. How exciting the movie tittle is that exciting the movie will be ….. last day 3pm to 3am had a 12 hours continuous work shop for 🥰 LIC🥰 … Dir @VigneshShivN sir , @pradeeponelife sir and myself had a awesome session 👍👍👍 … I felt…
— S J Suryah (@iam_SJSuryah) December 23, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments