ரஜினி படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனா? அதிகாரபூர்வ விளக்கம்
- IndiaGlitz, [Monday,April 08 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தலைவர் 167' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதே நாளில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவியது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்ததால் இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது
இந்த நிலையில் ரஜினி படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் வதந்தி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினியின் பி.ஆர்.ஓ தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தலைவர் 167 படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா தவிர வேறு யாரும் இன்னும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எனவே இதுபோன்ற வதந்தியை மீடியாக்கள் நம்பி செய்தி வெளியிட வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக பரவி வந்த இந்த வதந்தி முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது