இந்த முறை ரொமான்ஸ் எல்லாம் கிடையாது.. முழுக்க முழுக்க ஆக்சன் தான்: எஸ்ஜே சூர்யாவின் புதிய முயற்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என்று போற்றப்படும் எஸ்ஜே சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்ஜே சூர்யா தற்போது ஷங்கர் இயக்கி வரும் ’கேம் சேஞ்சர்’ மற்றும் ’இந்தியன் 2’ தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ராயன்’ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’எல்ஐசி’ மற்றும் விக்ரம் நடிக்க இருக்கும் ’சியான் 62’ உட்பட ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித் நடித்த ’வாலி’ விஜய் நடித்த ’குஷி’ உட்பட சில படங்களை இயக்கிய எஸ்ஜே சூர்யா தற்போது மீண்டும் ஒரு திரில்லர் கதையம்சம் உள்ள படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் உருவான பெரும்பாலான படங்கள் ரொமான்ஸ் கதைகளாக இருந்த நிலையில் தற்போது அவர் இயக்க இருக்கும் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றும் இந்த படத்திற்கு ’கில்லர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஒரு கார் முக்கிய கேரக்டரில் இடம்பெறுவதாகவும் அதுதான் ’கில்லர்’ என்றும் இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லாமல் முழுக்க முழுக்க ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஆக்சன் காட்சிகள் இருக்கும் கூறப்படுகிறது. இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யா தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்து, இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments