பிரபல ஹீரோ படத்தில் இணைந்த எஸ்.ஜே சூர்யா, பிரியங்கா மோகன்..!
- IndiaGlitz, [Friday,December 20 2024]
பிரபல ஹீரோ நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா, நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான் என்பதும், சமீபத்தில் அவர் நடித்த லக்கி பாஸ்கர் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் மலையாள திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே படத்தில் துல்கர் சல்மான், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்க இருப்பது, இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே மலையாளத்தில் பகத் பாசில் நடிக்கும் மலையாளதிரைப்படத்திலும் எஸ்ஜே சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு மலையாள படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
எஸ் ஜே சூர்யா தற்போது ஷங்கரின் கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, வீர தீர சூரன் மற்றும் சர்தார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், மலையாளத்திலும் அவர் ஒரு பிசியான நடிகராக மாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.