மீண்டும் ஒரு பிரபலத்தின் படத்தில் வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீப காலமாக நடிகர் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து கலக்கி வருகிறார் என்பதும் அவர் வில்லனாக நடித்த ’மாநாடு’ ’டான்’ ’வாரிசு’ ’மார்க் ஆண்டனி’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன என்பதை பார்த்தோம்
மேலும் அவர் ’ஜிகர்தண்டா 2’, ‘கேம் சேஞ்சர்’ ‘இந்தியன் 2’, ‘D50’ ஆகிய படங்களில் வில்லனாகவும், முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக அவர் நானி நடிக்க இருக்கும் 31-வது திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழை அடுத்து தெலுங்கிலும் அவர் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்பதும் அங்கும் அவர் வில்லத்தனம் நடிப்பில் கலக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நானியின் 31வது திரைப்படத்தில் ஏற்கனவே நாயகி ஆக பிரியங்கா மோகன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார் என்பதை பார்த்தோம். இன்னும் யார் யார் எல்லாம் இந்த படத்தில் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Delighted to have the majestic @iam_SJSuryah on board and he's ready to give you all CHILLS 🤩🤙🏾#Nani31
— DVV Entertainment (@DVVMovies) October 22, 2023
Natural🌟 @NameIsNani #VivekAthreya @DVVMovies pic.twitter.com/OayBSIthGq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com