'மாஸ்டர்' படம் குறித்து பள்ளித்தேர்வில் எழுதிய 6ஆம் வகுப்பு மாணவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்பதும் கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின் வெளியான முதல் வெற்றிப் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்த ஒரே படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி ஒருசில மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இப்போதும் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் ‘மாஸ்டர்’ படம் குறித்து பள்ளி தேர்வில் எழுதிய தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
’நான் தியேட்டருக்கு சென்ற அனுபவம்’ என்பது குறித்து கட்டுரை எழுதி அந்த மாணவர் சமீபத்தில் நான் தியேட்டரில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பார்த்தேன். அந்த திரைப்படத்தை மிகவும் ரசித்தேன். சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள்ளை தடுக்க மாஸ்டர் ஜேடி எப்படி உதவுகிறார் என்பதை அந்த படத்தில் அழகாக காண்பித்திருக்கிறார்கள். குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் என் மனதில் இன்னும் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த படத்தை மீண்டும் ஒருமுறை நான் நண்பர்களுடன் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று அந்த மாணவர் எழுதியுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments