மயங்கி விழுந்த மாணவிக்காக பிரேயர் செய்த பள்ளி! 'சூப்பர் டீலக்ஸ்' பாணியில் ஒரு நிஜசம்பவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் உடல்நலமின்றி துடிக்கும் மகனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் பிரேயர் செய்யும் கேரக்டரில் இயக்குனர் மிஷ்கின் நடித்திருப்பார். அதேபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் இரணியல் என்ற பகுதி அருகே நடந்துள்ளது.
முருகன், ஜலஜா தம்பதி மகள் காவ்யா என்ற மாணவி அருகில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த வியாழன் அன்று தேர்வு எழுதி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து பள்ளி நிர்வாகம், மாணவியின் தாயாருக்கு தகவல் கொடுத்தனர்.
45 நிமிடங்கள் கழித்து வந்த மாணவியின் தாயார் உடனே தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டதால் மூளை நரம்பு பாதிப்பு அடைந்து மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் வலிப்பு வந்தவுடனே மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவியின் தாயார் கூறியபோது, 'வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த எனது மகளுக்கு முதலுதவி கூட கொடுக்காமல் பள்ளி நிர்வாகத்தினர் பிரேயர் செய்து கொண்டிருந்ததாகவும், வலிப்பு ஏற்பட்ட உடனே பள்ளி நிர்வாகம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் எனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என்று மருத்துவமனையில் சேர்த்த பின்னர் அவர்கள் பிரேயர் செய்திருக்கலாம் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறியபோது 'மாணவி மயங்கி விழுந்துவிட்டதாக தாயாரிடம் தெரிவித்தபோது அவர் மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள் என்று கூறவில்லை என்றும், மேலும் வாயில் நுரை வராததால் வலிப்பு என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மொத்தத்தில் ஒரு கவனக்குறைவால் பிஞ்சு உயிர் ஒன்று இழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com