தமிழ் திரைப்பட இயக்குனர் திருமணம்: சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்து

  • IndiaGlitz, [Thursday,September 02 2021]

தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவருக்கு நேற்று திருமணம் நடந்த நிலையில் சிவகார்த்திகேயன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்

வைபவ் நடித்த ‘சிக்சர்’ என்ற படத்தின் இயக்குனர் சாச்சி. இவர் தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகரான சதீஷின் மச்சான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று காலை கோவிலம்பாக்கத்தில் உள்ள விஜய் ராஜா திருமண மண்டபத்தில் இயக்குனர் சாச்சி சென்னையைச் சேர்ந்த டாக்டர் சரண்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நடிகர்கள் சதீஷ் , மிர்ச்சி சிவா , இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் P.G முத்தையா , அஜய் (நடன இயக்குனர்) , நிப்பு சாமி , நடிகை ரித்திவிகா, வென்பா, கிருத்திகா, அமுதவணன் , ஆகாஷ் ,குறைஷி, தினேஷ் கண்ணன் , ஜோமின், விஜய் டிவி தீனா,பாலா, DSK, அஷார், தங்கதுரை, சதீஷ் KPY, அடம்ஸ், மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் சாச்சியின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

More News

'பீஸ்ட்' படப்பிடிப்பை முடித்துவிட்டாரா பூஜா ஹெக்டே: அவரே அளித்த பதில்

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நேற்று முதல் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நான்காம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி

பிக்பாஸ் டைட்டில் வின்னர் மாரடைப்பால் மறைவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக் பாஸ் டைட்டில் வின்னரும், பிரபல நடிகருமான ஒருவர் 40 வயதில் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

ஓடிடி ரிலீஸ்: திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷால், ஆர்யாவின் 'எனிமி' ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

சூர்யா நடிக்க வேண்டிய படத்தில் விஜய்சேதுபதி? லோகேஷ் கனகராஜின் அதிரடி முடிவு

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்ததாக கூறப்பட்ட திரைப்படத்தில் தற்போது விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.