தமிழ் திரைப்பட இயக்குனர் திருமணம்: சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவருக்கு நேற்று திருமணம் நடந்த நிலையில் சிவகார்த்திகேயன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்
வைபவ் நடித்த ‘சிக்சர்’ என்ற படத்தின் இயக்குனர் சாச்சி. இவர் தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகரான சதீஷின் மச்சான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று காலை கோவிலம்பாக்கத்தில் உள்ள விஜய் ராஜா திருமண மண்டபத்தில் இயக்குனர் சாச்சி சென்னையைச் சேர்ந்த டாக்டர் சரண்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமண நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நடிகர்கள் சதீஷ் , மிர்ச்சி சிவா , இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் P.G முத்தையா , அஜய் (நடன இயக்குனர்) , நிப்பு சாமி , நடிகை ரித்திவிகா, வென்பா, கிருத்திகா, அமுதவணன் , ஆகாஷ் ,குறைஷி, தினேஷ் கண்ணன் , ஜோமின், விஜய் டிவி தீனா,பாலா, DSK, அஷார், தங்கதுரை, சதீஷ் KPY, அடம்ஸ், மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இயக்குனர் சாச்சியின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com