3000ஐ தாண்டிய ராயபுரம், 2000ஐ தாண்டிய 3 மண்டலங்கள்: சென்னை தாங்குமா?
- IndiaGlitz, [Friday,June 05 2020]
சென்னையில் கடந்த 4 நாட்களுக்காக கொரோனாவின் பாதிப்பு தினமும் 1000க்கும் மேல்அதிகரித்து கொண்டே வருவதால் சென்னையில் கொரோனா பரவுதலை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று முதல் சென்னையில் மேலும் 1000 டாக்டர்கள் கொரோனா தடுப்பு பிரிவில் பணிபுரிவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.. இதன்படி சென்னையின் 15 மண்டலங்களில் 18693 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 3388 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 2136 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2123 பேர்களும், தண்டையார்பேடை மண்டலத்தில் 2261 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையின் மூன்று மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2000ஐ தாண்டியுள்ளது.
அதேபோல் திருவிக நகர் மண்டலத்தில் 1855 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 1660 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 1042 பேர்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 975 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணாநகர் ஆகிய ஆறு மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் இம்மண்டலங்களில் சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.