கொரோனா வார்டில் பணிபுரியும் தாயை பார்த்த 6 வயது மகள்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ
- IndiaGlitz, [Monday,April 13 2020]
கொரோனா வார்டில் பணிபுரியும் தாயை ஒரு மாதத்திற்கு பின் பார்த்த 6 வயது மகள் பாசத்துடன் ஓடிவந்து கட்டியணைத்து கதறி அழுத காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
துருக்கியில் மருத்துவ செயலாளராக பணிபுரியும் ஒஸ்ஜி கோகெக் என்பவர் கடந்த ஒரு மாதமாக இடைவிடாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இடைவிடாத பணி காரணமாக தனது 6 வயது மகளை தனது தாயார் வீட்டில் ஒஸ்ஜி ஒப்படைத்திருந்தார். பாட்டில் வீட்டில் தாயாரை பிரிந்து ஒருமாதமாக இருந்த 6 வயது குழந்தை தாயாரை பார்க்க ஏங்கி தவித்தது
இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் தனது மகளை சந்திக்க முடிவு செய்து ஒஸ்ஜி, தனது தாயார் வீட்டிற்கு சென்றபோது தனது மகள் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்ததை பார்த்து அவரது அருகில் சென்றார்.
திடீரென ஒரு மாதத்திற்கு பின் தாயாரை பார்த்த அந்த ஆறு வயது சிறுமி செய்வதறியாது திகைத்து ஓடி வந்து தாயை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அனைவரையும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதமாக மகளைப் பிரிந்து இருந்த தாயாரும் மகளை கட்டியணைத்து கதறி அழுதார். இருவரும் ஒருவரை ஒருவர் பாசத்தை கண்ணீரின் மூலம் வெளிப்படுத்திய இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது