வெள்ளத்திற்கு பின் களை கட்டும் ரிலீஸ் திரைப்படங்கள்.. டிசம்பர் 15ல் 6 படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகளுக்கு செல்வதையே மக்கள் சில நாட்களாக மறந்து விட்டார்கள். வெள்ள பாதிப்பின் போது வெளியான ’அன்னபூரணி’ மற்றும் ’பார்க்கிங்’ திரைப்படங்களின் விமர்சனங்கள் நன்றாக இருந்தாலும் சுமாரான வசூலையே செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் அடுத்த வாரம் 6 திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ’உறியடி’ விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபைட் கிளப்’ என்ற திரைப்படம் அதிரடி ஆக்சன் படமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து வைபவ் நடித்த ’ஆலம்பனா’ என்ற திரைப்படம் ஃபேண்டஸி படம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி நடித்த ’கண்ணகி’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படமும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது.
மேலும் அசோக் செல்வன் நடித்த ’சபா நாயகன்’ திரைப்படம் ஜாலியான ஒரு ரொமான்ஸ் காமெடி படம் என்பதால் இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் சசிகுமார் மற்றும் சரத்குமார் நடித்த ’நாநா’ என்ற திரைப்படமும் நிச்சயம் பெரும் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ’விவேசினி’ என்ற தமிழ் படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.
அடுத்த வாரம் 6 திரைப்படங்கள் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com