இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள்.. சினிமா ரசிகர்களுக்கு குஷி..!

  • IndiaGlitz, [Thursday,September 19 2024]

ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், திரையரங்கில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் 6 தமிழ் படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து, சினிமா ரசிகர்களுக்கு குஷி ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் 'பேச்சி' என்ற தமிழ் படமும், ஆகா ஓடிடியில் 'சாலா' மற்றும் 'காபி' என்ற தமிழ் படங்களும் வெளியாக இருக்கின்றன.சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன விக்ரம் நடித்த 'தங்கலான்' திரைப்படம் Netflix ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 'தோப்போமைன்' என்ற தமிழ் திரைப்படம் Simply South ஓடிடியில், 'தலை வெட்டியான் பாளையம்' என்ற தமிழ் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மேலும், ETV ஓடிடியில் 'சோபதுலு' என்ற தெலுங்கு படமும், ஆகா ஓடிடியில் 'திரகபர்தரா சாமி' என்ற தெலுங்கு படமும், 'மாருதி நகர் சுப்பிரமணியம்' என்ற தெலுங்கு படமும் வெளியாகின்றன.

'வாழ' என்ற மலையாள திரைப்படம் Hotstar ஓடிடியில், 'அனந்தபுரம் டைரிஸ்' என்ற மலையாள திரைப்படம் Manorama Max ஓடிடியில் வெளியாகின்றன.

More News

ஒரே வருடத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்கினாரா ஏஆர் முருகதாஸ்.. ஆச்சரிய தகவல்..!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், கடந்த நான்கு ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த நிலையில், தற்போது அவர் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்

தனுஷ் விவகாரத்தில் தலையிடும் பெப்சி.. நடிகர் சங்கம் கண்டனம்..!

நடிகர் தனுஷ் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க ஃபெப்சி வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்திய வழக்கு: தமிழ் இயக்குனர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை..!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உள்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை.. மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்த பிரபல நடிகை..!

மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மை என ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகளில்

சூர்யாவின் 'கங்குவா' ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என நேற்று வெளியான தகவலின்படி, சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.