நிறைய கற்று கொண்டேன்.. ஆறு மாத தாய் அனுபவம் குறித்து காஜல் அகர்வால்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து 6 மாதம் ஆகிவிட்டதை அடுத்து ஆறு மாத கால தாய் அனுபவம் குறித்து கவிதைத்தனமான ஒரு பதிவை அவர் செய்துள்ள நிலையில் அந்த பதிவை தற்போது வைரலாகி வருகிறது.
மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு காஜல் அகர்வால் திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கர்ப்பமானது முதல் குழந்தை பிறக்கும் வரை ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு என்னென்ன அனுபவம் ஏற்படும் என்பதை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திய காஜல் அகர்வால் தற்போது குழந்தை பிறந்த பின்னர் 6 மாத கால தாயன்பு குறித்து அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஆறு மாதங்கள் எவ்வளவு வேகமாக கடந்து விட்டன என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தை பிறந்த ஒரு பெண்ணின் மார்பில் என்னென்ன மாற்றம் ஏற்படும்? அந்த மாற்றத்திலிருந்து குழந்தைக்கான கடமையை நிறைவேற்றுவது எப்படி? என்பது வரை நிறைய கற்றுக்கொண்டு விட்டேன்.
குழந்தையை பொருப்பாக வளர்ப்பது என்பது ஒரு முழுநேர வேலை. அதில் சமரசம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. முழுநேரமும் குழந்தை மீது கவனம், அன்பு, கவனிப்பு ஆகியவற்றை செலுத்தும் பணி எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனாலும் அதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.
இந்த அனுபவத்தை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. இப்போது எனது குழந்தை தரையில் உருண்டு இடமிருந்து வலமாகவும் வயிறு பின்புறமாகவும் ஆடுகிறார். ஒரே இரவில் இது நடப்பதாக எனக்கு தோன்றியது. எனது குழந்தையின் முதல் சளி, முதல்முறையாக தலையில் பட்ட அடி, முதல் முறையாக குளத்தில் குளிக்க வைத்தது, கடலுக்கு அழைத்து சென்றது ஆகியவற்றை நான் இப்போது நினைத்து பார்க்கின்றேன்.
நானும் எனது கணவரும் அடுத்த வாரம் எங்கள் குழந்தை கல்லூரிக்கு செல்லும் என்று நாங்கள் கேலி செய்து வருகிறோம். ஏனெனில் நேரம் மிகவும் விரைவாக முன்னேறிக் கொண்டே வருகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நான் இன்பமாக அனுபவம் வருகிறேன். ஒரு குழந்தையின் தாயாக ஆசீர்வதிக்கும் பெரிய பொறுப்பை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார். அதை நான் கண்டிப்பாக பொறுப்பாக செய்வேன்’ என்று அந்த பதிவில் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments