தங்க மங்கை மீராபாய் செய்த காமன்வெல்த் சாதனைகள்ல்

  • IndiaGlitz, [Thursday,April 05 2018]

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்த தங்க மங்கை மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் மீராபாய்க்கு தங்கப்பதக்கம் கிடைத்தது மட்டுமின்றி அவர் தூக்கிய அத்தனை எடைகளும் காமன்வெல்த் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 11 வீராங்கனைகள் பங்கேற்ற பளு தூக்கு போட்டியில், ஸ்நாட்ச் முறையில் முதல் முறை 81 கிலோ எடையையும், அதன்பின்னர் 84 கிலோ, 86 கிலோ எடையையும் தூக்கி தொடர்ந்து மூன்று காமன்வெல்த் சாதனையை செய்தார்.

இந்த மூன்று சாதனையை தொடர்ந்து கிளீன் & ஜெர்க் முறையில் 103 கிலோ, 107 கிலோ, 110 கிலோ எடையை தூக்கினார். இவ்வாறு மீராபாய் 3 முறை தூக்கிய 3 எடையும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சாதனையாக அமைந்தது. மொத்தத்தில் 48 கிலோ பிரிவில் அவர் தூக்கிய 6 எடைகளும் காமன்வெல்த் சாதனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனை ஷகிலாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த டி.ஆர்.

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசனை திரையுலகில் உள்ள ஒருசிலரே கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்

அஜித், விஜய் குறித்து டிவி நடிகை கூறிய மாஸ் பதில்

சின்னத்திரை, பெரிய திரை என எந்த நட்சத்திரமாக இருந்தாலும் மீடியாக்களுக்கு பேட்டியளிக்கும்போது கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களான அஜித், விஜய் குறித்து பேசாமல் அந்த பேட்டி முழுமை அடையாது.

சல்மான்கானுக்கு என்ன தண்டனை! நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

கடந்த 1998ஆம் ஆண்டு அரிய வகை கருப்பு நிற மான்களை வேட்டையாடியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார் எ

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்திற்கே இந்த நிலையா? சென்சார் அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் இம்மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் தற்போது சென்சார் சான்றிதழை பெற்றுள்ளது.

அரசியலில் கமல்ஹாசன் அப்ரண்டீஸ்: ஜெயகுமார்

கடந்த சிலநாட்களாகவே கமல்ஹாசனை அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்வதும், அதற்கு கமல்ஹாசன் நக்கல் நையாண்டியுடன் பதில் சொல்வதுமாக நடந்து வருகிறது.