தங்க மங்கை மீராபாய் செய்த காமன்வெல்த் சாதனைகள்ல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்த தங்க மங்கை மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் மீராபாய்க்கு தங்கப்பதக்கம் கிடைத்தது மட்டுமின்றி அவர் தூக்கிய அத்தனை எடைகளும் காமன்வெல்த் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 11 வீராங்கனைகள் பங்கேற்ற பளு தூக்கு போட்டியில், ஸ்நாட்ச் முறையில் முதல் முறை 81 கிலோ எடையையும், அதன்பின்னர் 84 கிலோ, 86 கிலோ எடையையும் தூக்கி தொடர்ந்து மூன்று காமன்வெல்த் சாதனையை செய்தார்.
இந்த மூன்று சாதனையை தொடர்ந்து கிளீன் & ஜெர்க் முறையில் 103 கிலோ, 107 கிலோ, 110 கிலோ எடையை தூக்கினார். இவ்வாறு மீராபாய் 3 முறை தூக்கிய 3 எடையும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சாதனையாக அமைந்தது. மொத்தத்தில் 48 கிலோ பிரிவில் அவர் தூக்கிய 6 எடைகளும் காமன்வெல்த் சாதனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com