பெங்களூர் புத்தாண்டு சம்பவம். முக்கிய குற்றவாளிகள் பிடிபட்டனர்.
- IndiaGlitz, [Saturday,January 07 2017]
கடந்த புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் பெங்களூரில் இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தில் வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் தரவில்லை எனினும், போலிசார் தாங்களாகவே வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐயப்பா (19), லெனோ (20), சுதேஷ் (20), சோமஷேகர் (24) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
ஆட்டோவில் இருந்து இறங்கி வீடு சென்ற இளம்பெண்ணை குடிபோதையில் 'ஹேப்பி நியூ இயர்' என்று கத்தியவாறு அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிடிபட்ட நான்கு பேர்களின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்களில் ஐயப்பாவை மட்டும் அந்த பெண் அடையாளம் காட்டியுள்ளதாகவும் போலீசார் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியாமல் இந்த வழக்கை விசாரணை செய்து கொண்டு வருவதாகவும், அந்த பெண்ணுக்கு காவல்துறை முழு பாதுகாப்பை வழங்கும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.