ஸ்மால் பாஸ் ஹவுஸ்-க்கு 6 பேரை அனுப்பிய தினேஷ்: இந்த 2 பேர் லிஸ்ட்லேயே இல்லையே..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் ஸ்மால் பாஸ் ஹவுஸ் என்ற ஒரு புதிய வீடு இருக்கிறது என்பதும் இந்த ஹவுஸில் சில போட்டியாளர்கள் அனுப்பப்பட்டு வந்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த வார கேப்டன் தினேஷ் ஆறு போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் ஹவுஸ்க்கு அனுப்பி உள்ளார். அவர்களில் முதலாவதாக பூர்ணிமா மற்றும் விக்ரமை கூறுகிறார். இந்த 50 நாட்கள் இருவரும் எதுவுமே செய்யவில்லை என்றும் குறிப்பாக பூர்ணிமா கேலி கிண்டல் மற்றும் வதந்தி ஆகியவை மட்டுமே செய்துள்ளதாகவும் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார். அதற்கு பூர்ணிமா தனது எதிர்ப்பை கூற தினேஷ் அதற்கு பதிலடி கொடுத்தார்.
இதனை அடுத்து இந்த 50 நாட்களில் எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டதாகவும் இனிமேல் அவர்கள் செய்வதற்கு எதுவும் இல்லை என்று என்ற எண்ணத்தில் ஸ்மால் பாஸ் ஹவுஸ்க்கு அனுப்புவதாக விஷ்ணு மற்றும் விசித்ராவை தினேஷ் கூறினார்.
இதனை அடுத்து இந்த 50 நாட்களாக ஒரு முகமூடி ஆகவே இருந்துவிட்டு தன்னுடைய ஒரிஜினல் முகத்தை இன்னும் காட்டாமல் இருக்கிறார் என்று பிராவோ மற்றும் ஜோவிகாவை கூறுவதாக தினேஷ் கூறினார்
ஆக மொத்தம் இந்த வாரம் விக்ரம், பூர்ணிமா, விஷ்ணு, விசித்ரா, பிராவோ மற்றும் ஜோவிகா ஆகிய ஆறு பெயர்களை ஸ்மால் பாஸ் ஹவுஸ்க்கு அனுப்புவதாக தினேஷ் கூறியுள்ளதை அடுத்து ஆறு பேரும் ஸ்மால் ஹவுஸ் சென்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com