3 தனித்தனி புகார்கள் எதிரொலி: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு!

  • IndiaGlitz, [Sunday,June 13 2021]

சென்னை அருகே சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அருகே சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து மூன்று தனித்தனி புகார்கள் காவல் துறையில் பதிவு செய்யப்பட்டது. இந்த புகார்களின் அடிப்படையில் தற்போது சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் கீழ் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவிகள் புகாரின் அடிப்படையில் நேரில் ஆஜராக வேண்டும் என சிவசங்கர் பாபாவுக்கு குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் சிவசங்கர் பாபா நெஞ்சுவலியால் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறி சிவசங்கர் பாபாவுக்கு பதில் வேறொருவர் குழந்தைகள் நல உரிமைகள் ஆணையத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அவர் கைது செய்யப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

நாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 21-ஆம் தேதி வரை நீடிப்பதாக அறிவித்தார்.

சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசார் வேண்டாம்: டிஜிபியின் உத்தரவுக்கு 'மாநாடு' தயாரிப்பாளர் நன்றி!

சாலை பாதுகாப்பு பணிகளில் இனி பெண் போலீசாரை ஈடுபடுத்த வேண்டாம் என டிஜிபி திரிபாதி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிவி பிரகாஷ்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் ஜிவி பிரகாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள்,

மன்னிப்பை ஏற்க முடியாது, புகார் அளிக்க போவது உறுதி: பாடகி சின்மயி திட்டவட்டம்

தற்போது மிக வேகமாக பரவி வரும் கிளப் ஹவுஸ் என்ற குரல் வழி பேசும் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மருத்துவர் ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக

டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து தமிழ் நடிகையின் கருத்து: ரசிகர்கள் குழப்பம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் அறிவித்தார்