தன்னுடைய மகளுக்காக ஹீரோவை தேடும் பணியில் 80ஸ் நடிகை....!

  • IndiaGlitz, [Monday,August 30 2021]

தமிழ் சினிமாவில், கடந்த 1992-ல் நடிகர் கார்த்திக் அவரோடு மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சிவரஞ்சனி. இதைத்தொடர்ந்து உலகநாயகனுடன் கலைஞன், கேப்டனுடன் ராஜதுரை, பிரபு-வுடன் சின்ன மாப்ள மற்றும் தலைவாசல் போன்ற 20 தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். 80-களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து காதல் நாயகியாக வலம் வந்தார்.

1990-ல் கன்னடத்தில் ஹிருதய சாரம்ராஜ்யா என்ற படம் மூலம் அறிமுகமான ரஞ்சினி, ஒருசில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கில் 1994-ல் ஆமி என்ற படம் மூலம் அறிமுகம் தந்து, சிறந்த நடிகைக்கான நந்தி விருதை பெற்றார். தெலுங்கு சினிமாவுக்காக தனது பெயரை ஊஹா என மாற்றிக்கொண்டவர், தெலுங்கு நடிகர் மேகா ஸ்ரீகாந்தை 1997- ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உட்பட, ஒரு மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய மகள் மேகா டீன்ஏஜ் பருவத்தை எட்டியுள்ளதால், அவரை நாயகியாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் இவர். ரஞ்சினியும், அவரது கணவரும் இணைந்து மகளுக்காக நல்ல கதையம்சம் கொண்ட இயக்குனர் மற்றும் ஹீரோவை தேடி வருகிறார்கள். ருத்ரமாதேவி என்ற திரைப்படத்தில் மேகா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.