என்னப்பா பண்ணி வெச்சிருக்க.. நெல்சனுக்கு போன் பண்ணிய சிவராஜ்குமார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இதில் மூவருக்குமே மாஸ் காட்சிகள் இருந்தது என்பதும் மூவரையும் மிகச் சரியாக நெல்சன் பயன்படுத்தி இருந்தார் என்றும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நெல்சன் இது குறித்து கூறிய போது ’நாங்கள் மல்டிஸ்டார் படம் எடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணவில்லை. இந்த படத்தில் இந்த மூன்று கேரக்டர்கள் கதைக்கு தேவையாக இருந்தது. அதற்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள மாஸ் நடிகர்களை பயன்படுத்திக்கலாம் என்ற ஐடியா வந்ததன் காரணமாக தான் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராப் இந்த படத்தில் வந்தனர். வலிய நாங்கள் இந்த நடிகர்களை திணிக்கவில்லை என்று கூறினார்.
மேலும் மோகன்லால் படம் பார்த்து போன் செய்தபோது ’கேரளாவில் இந்த படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதாக கூறினார். அதை கேட்டு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் சிவராஜ்குமார் எனக்கு போன் செய்து ’நான் இன்னும் படம் பார்க்கவில்லை ஆனால் என்னப்பா பண்ணி வச்சிருக்க, எனக்கு போன் மேல போன் வந்துகிட்டே இருக்கு, வாழ்த்துக்கள் குவிந்துக்கிட்டே இருக்கு’ என்று கூறினார்
இந்த நிலையில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய பிரபலங்களை பயன்படுத்திய நிலையில் தமிழில் ஏன் இன்னொரு பிரபலத்தை பயன்படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த நெல்சன், ‘ ரஜினியை தாண்டி இன்னொரு பிரபலம் இந்த படத்திற்கு தேவையில்லை என்று கருதினேன் என்று கூறினார்..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com