ரோடு தான் ஆபிஸ், வெயில்தான் ஏசி: சிவப்பு மஞ்சள் பச்சை டீசர் ரிலீஸ்

  • IndiaGlitz, [Friday,June 14 2019]

சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சசி இயக்கிய 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சித்தார்த் போக்குவரத்து காவல்துறை அதிகாரியாகவும், ஜிவி பிரகாஷ் சட்டவிரோதமாக சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞராகவும் நடித்துள்ளனர். 'கேப்ல ஓட்டற தில் இருக்குறவன் தான் மாஸ்' என்ற கொள்கையுடன் வாழும் ஜிவி பிரகாஷுக்கு எதிராக களமிறங்கும் போலீஸ் அதிகாரி சித்தார்த்தின் நடவடிக்கைகள் தான் இந்த படம். பெரும்பாலான காட்சிகள் ரேஸ் மற்றும் சேஸிங் காட்சிகளாக இருப்பதால் இந்த படம் த்ரில் பட ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோதமாக பைக் ரேஸில் ஈடுபடுவதால் பல விபத்துக்கள் சென்னையில் நடந்து வரும் நிலையில் அதுகுறித்த ஒரு விழிப்புணர்வு திரைப்படம் எடுத்துள்ள இயக்குனர் சசியை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். 'பிச்சைக்காரன்' படத்தை அடுத்து இந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என்று தெரிகிறது.

சித்தார்த், ஜிவி பிரகாஷ், லிஜோமால் ஜோஸ், காஷ்மீரா பர்தேஷி, தீபா ராமானுஜம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார், இந்த படம் ஜூலையில் வெளியாகவுள்ளது.
 

More News

த்ரிஷாவின் 'கர்ஜனை' குறித்த முக்கிய அறிவிப்பு!

ரஜினியுடன் 'பேட்ட', மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் '96' என தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது 'கர்ஜனை', சதுரங்க வேட்டை 2', 'பரமபத விளையாட்டு',

உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள்: விஷாலை கடுமையாக விமர்சித்த ராதிகா

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாண்டவர் அணியினர் வெளியிட்ட ஒரு பிரச்சார வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாபால் வெளியிட்ட விஜய்சேதுபதி பட போஸ்டர்!

விஜய்சேதுபதியின் 33வது படம் குறித்த அறிவிப்பு இன்று காலை வெளிவந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் முதல்முறையாக நடிகை அமலாபால் இணைந்து நடிக்கவுள்ள செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ரஜினிக்கு கசின், நயனுக்கு அங்கிள்: முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில்

10 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் ஒரு படத்தை முடக்கி விடலாமா? நயன்தாரா படத்தயாரிப்பாளர் ஆவேசம்

கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்படும் ஒரு திரைப்படத்தை கடைசி நேரத்தில் ஒருசில ஆயிரங்கள் செலவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து படத்தின் ரிலீஸை நிறுத்திவிடும் கலாச்சாரம்