நடிகர் சிவகுமார் செய்த நெகிழ்ச்சியான செயல்.. ராதிகா சரத்குமார் வெளியிட்ட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் நடிகர் சிவகுமார் செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்த வீடியோவை நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார் என்பதும் தீவிர பிரச்சாரம் செய்த நிலையில் அவர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன என்பது தெரிந்தது.
இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் கால் வலியால் அவதிப்பட்டு ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க நடிகர் சிவகுமார், ராதிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது கைப்பட வரைந்த சில ஓவியங்களை ராதிகாவுக்கு பரிசாக அளித்த நிலையில் அந்த ஓவியங்களை பார்த்த ராதிகா ஆச்சரியமடைந்து ’ரொம்ப நன்றி அண்ணா’ என்று சொல்லும் காட்சி ராதிகா வெளியிட்ட வீடியோவில் உள்ளன. இந்த நெகிழ்ச்சியான வீடியோவுக்கு ஏராளமான லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.
நடிகர் சிவகுமார் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் குறிப்பாக பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’பசும்பொன்’ திரைப்படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள் என்பதும் அதேபோல் கலைஞர் கதை வசனம் எழுதிய ’பாசப்பறவைகள்’ திரைப்படத்தில் அண்ணன் தங்கையாக நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
A bond for life with #sivakumar anna, who came to see me as I am recovering from a leg procedure.shared so much on drawings , pictures and our travel 🙏🙏🙏🙏 pic.twitter.com/qxwuBMZD4q
— Radikaa Sarathkumar (@realradikaa) May 18, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments