சிவகுமாரின் மகாபார சொற்பொழிவு எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,February 17 2018]

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தியின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான சிவகுமார் என்பவர் நடிகர் மட்டுமின்றி சிறந்த ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அவர் ஆற்றிய இராமாயண, மகாபாரத இதிகாசங்களின் சொற்பொழிவு தமிழகத்தை தாண்டி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் பெரும் வரவேற்பை பெற்றது.

சிவகுமாரின் மகாபாரதம் சொற்பொழிவு சமீபத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிவிடிக்கள் விற்பனையாகியுள்ளன. இந்த நிலையில் இந்த சொற்பொழிவு தற்போது இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூன்றே மாதங்களில் இந்த மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெற்று, இன்று இந்த மொழிபெயர்ப்பு விழா சென்னையில் நடைபெற்றது.

இத்தாலி மொழியில் தனது சொற்பொழிவு மொழி பெயர்க்கப்பட்டது குறித்து சிவகுமார் கூறியபோது, 'மகாபாரதம் நாவலை ஒரு சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத டிவிடிக்கள் இதுவரை விற்றுள்ளன. இந்துவில் பணிபுரிந்த மாருதி வெங்கடாசலம் என்ற பெண்மணி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். குமார் என்பவர் ஒரு நாள் என்னிடம் தான் இதை இத்தாலி-யில் மொழிபெயர்ப்பு செய்ய போவதாக கூறினார். நான் அவர் காமெடி பண்ணுகிறார் என்று என்னினேன். சரி முயற்சியுங்கள் என்றேன். மாருதி வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய ஒரு வருடத்திற்கும் அதிகமான நேரமானது. இத்தாலி யில் மொழிபெயர்ப்பு செய்ய இரண்டு வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் மூன்றே மாதங்களில் முடித்துவிட்டார். மிகுந்த மகிழ்சியாக இருந்தது. இவ்வளவு பெரிய காவியம் மகாபாரதம் அது வேறொரு மொழியில் புத்தகங்களாக மாறி இத்தாலி செல்வதற்கு கண்டிப்பாக நான் உதவி செய்வேன்.

More News

சந்தானம் தனது பாணியை மாற்றி கொள்வது நல்லது: காமெடி நடிகர் ஜார்ஜ்

கடந்த பல வருடங்களாக காமெடி மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் ஜார்ஜ். குறிப்பாக தெய்வத்திருமகள், ஆம்பள, கலகலப்பு, கலகலப்பு 2 உள்பட பல படங்களில் அவரது சிறப்பான நடிப்பு வெளிப்பட்டுள்ளது.

கமல்-நல்லக்கண்ணு சந்திப்பில் நடந்தது என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் இன்று கமல்ஹாசனின் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து இருதரப்பினர்களும் மரியாதை நிமித்த சந்திப்பு என்று தெரிவித்தனர்.

கமல்ஹாசனை சந்திக்கின்றார் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கவுள்ள நிலையில் அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

விஷாலுக்கு வில்லனாகும் விஜய் ரசிகர்

விஷால், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் தற்போது இணைந்துள்ளார்.

சீமராஜா' டைட்டில் ஏன் தெரியுமா? வெளிவராத புதிய தகவல்

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் 'சீமராஜா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்