கேவி ஆனந்த் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா குடும்பம்.. ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு..!

  • IndiaGlitz, [Monday,February 12 2024]

மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான ’அயன்’ ’மாற்றான்’ மற்றும் ’காப்பான்’ ஆகிய மூன்று படங்களில் சூர்யா நடித்துள்ளார் என்பதும் மூன்றுமே நல்ல வெற்றி படங்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கேவி ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானதாகவும் அவர் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது. கேவி ஆனந்த் மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமே இரங்கல் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேவி ஆனந்த் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி உள்ளதை அடுத்து சூர்யா தனது தந்தை சிவகுமாருடன் கேவி ஆனந்த் வீட்டிற்கு சென்று அவரது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மகாத்மா காந்தி ஓவியத்தை சிவக்குமார் கேவி ஆனந்த் மகளுக்கு தனது திருமண பரிசாக கொடுத்தார்.

மேலும் கே.வி ஆனந்த் முழு குடும்பத்தினர்களுடன் சூர்யா மற்றும் சிவகுமார் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நெகிழ்ச்சியான இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

ஒரு ஆம்லேட் 300 ரூபாய்.. சென்னையில் ஸ்டார் ஓட்டல் ஆரம்பித்த நடிகை சிம்ரன்..!

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் , சூர்யா உட்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும்

படப்பிடிப்பே இப்பதான் தொடங்கியது.. அதற்குள் வேற லெவல் பிசினஸ்.. தனுஷின் 'DNS' படத்தின் மாஸ் தகவல்..!

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானாலும் சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இ

கையில் சிகரெட், நடிகையுடன் நைட் பார்ட்டி.. வேற லெவல் பட புரமோஷனில் பிரபல இயக்குனர்..!

பிரபல இயக்குனர் தனது படத்தில் நடித்த நடிகையுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு கையில் சிகரெட் உடன் இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து இந்த படத்தின் புரமோஷனில் இருப்பதாக

'மெட்ராஸ்காரன்' படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்.. வேற லெவல் தகவல்..!

சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த நடிகை நிஹாரிகா, தமிழில் 'மெட்ராஸ்காரன்'  என்ற படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான அறிவிப்பை சமீபத்தில் பார்த்தோம்.

'லெஜண்ட்' சரவணன் 2வது படத்தில் இணையும் பிரபலம் இவரா? சூப்பர் தகவல்..!

'லெஜண்ட்' சரவணன் நடித்த 'லெஜண்ட்' என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் திரையரங்கில் சுமாரான வெற்றியை பெற்றாலும் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெற்றது