காவேரி மருத்துவமனையில் சிவகுமார்-சூர்யா

  • IndiaGlitz, [Monday,July 30 2018]

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மூன்று நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பின்னடைவு, முன்னேற்றம் என மாறி மாறி இருந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்திய அரசியல் தலைவர்களும், தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்பட தமிழக அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகர்கள் சிவகுமார் மற்றும் சூர்யா ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து இருவரும் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.