close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த நாயகி மரியா!

Sunday, August 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் நாயகியான உக்ரைன் நாட்டின் மரியா என்பவர் சூப்பர் அப்டேட் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிரின்ஸ்’. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் உக்ரைன் நாட்டின் நடிகை மரியா என்பவர் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் நாயகி மரியா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிரின்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் இந்த படத்தின் குழுவினர் அற்புதமானவர்கள் என்றும், ஆக்கபூர்வமான மற்றும் அன்பான குழுவுடன் பயணம் செய்தேன் என்றும், இந்த பயணத்தை என்னால் மறக்க முடியாது என்றும் எப்பொழுதும் என் நண்பர்கள் குழுவினருடன் இருந்த நிலையில் தற்போது அவர்களை நான் மிஸ் செய்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் ரிலீசை நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ட்விட் போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment