தனுஷுடன் இணைந்த சிவகார்த்திகேயன் இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,July 25 2015]

சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்' மற்றும் 'காக்கி சட்டை' ஆகிய இரு படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் அடுத்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தனுஷ் தற்போது 'விஐபி 2', பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் துரைசெந்தில்குமாரின் அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படம் பாலிட்டிக்கல் த்ரில்லர் படம் என்றும் புதுப்பேட்டை' படத்திற்கு பின்னர் தனுஷ் நடிக்கும் அரசியல் பின்னணி படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது


துரைசெந்தில்குமார் இயக்கிய முந்தைய படமான 'காக்கி சட்டை' படத்தை தனுஷ்தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்தையும் அவரே தயாரிப்பார் என்றும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.