close
Choose your channels

அடாத மழையிலும் விடாது பணி செய்யும் சிவகார்த்திகேயன்!

Tuesday, November 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் சிவகார்த்திகேயனின் திரை உலக வாழ்க்கையில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை ’டாக்டர்’ படம் அவருக்கு பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’டான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’டான்’ படத்தின் டப்பிங் பணியை அடாது மழையிலும் விடாது முடித்து விட்டதாக சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டப்பிங் பணியின்போது தனக்கு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டதாகவும் மீண்டும் கல்லூரி காலம் தனக்கு நினைவுக்கு வந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment