close
Choose your channels

இயக்குனராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்.. உறுதி செய்த பிரபலம்!

Tuesday, December 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு அவதாரங்களில் தமிழ் திரையுலகில் ஜொலித்த வரும் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கிரிக்கெட் பிரபலம் ஒருவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் என்பதும் அவரது திரைப்படம் வெளியாகும்போது ரசிகர்கள் அதனை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘என்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்னுடைய கிரிகெட் கேரியர் முடிந்த பின்னர் உருவாக்கப்படும் என்றும் இந்த படத்தில் என்னுடைய கேரக்டரில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பார் என்றும் அதுமட்டுமின்றி அவரே இந்த படத்தை இயக்குவார் என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து விரைவில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் உள்பட பல நடிகர்கள் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் இயக்கும் முதல் படமாக நடராஜனின் வாழ்க்கை வரலாறு ஆக இருந்தால் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.