சிவகார்த்திகேயன் வீட்டுக்கு வரும் குட்டி எஸ்கே.. ஃபேமிலி வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது அவருடைய மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பது போன்ற வீடியோ இனி இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து விரைவில் அவருடைய குடும்பத்தில் குட்டி எஸ்கே வரப்போகிறார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நீண்ட நாள் தோழி ஆர்த்தி என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் அவர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பது போல் தெரிகிறது.
சமீபத்தில் நடந்த சிவகார்த்திகேயன் வீட்டு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட குரூப் வீடியோவில் ஆர்த்தி கர்ப்பமாக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டில் இன்னொரு குழந்தை விரைவில் வரப்போகிறது என்பதை அறிந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிவகார்த்திகேயன் வீட்டுக்கு வரப்போவது குட்டி எஸ்கேயா? அல்லது குட்டி ஆர்த்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'அமரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்த நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்.கே 23’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடிந்த பிறகு அவர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Third Kutty SK incoming 👶❤️#Sivakarthikeyan and family recent video !!pic.twitter.com/PFpeFlE1Sr
— AmuthaBharathi (@CinemaWithAB) May 30, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com