close
Choose your channels

கொட்டும் மழையில் மனைவியுடன் 'பிரின்ஸ்' படம் பார்க்க வந்த சிவகார்த்திகேயன்! வைரல் வீடியோ

Friday, October 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இன்று அதிகாலை கொட்டும் மழையில் தனது மனைவி ஆர்த்தியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க வந்திருந்தார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஜாதி ரத்னாலு’ என்ற படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் சிவகார்த்திகேயனின் முதல் தீபாவளி ரிலீஸ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சி தொடங்கிய நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக தனது மனைவி ஆர்த்தியுடன் சிவகார்த்திகேயன் வந்தார். அவருக்கு ரசிகர்கள் படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். கொட்டும் மழையில் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் தியேட்டருக்கு வந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் காட்சி சற்றுமுன் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயனின் வழக்கமான டைமிங் காமெடி இந்த படத்தில் அதிகம் இருப்பதாகவும் தீபாவளிக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையிலான ஒரு நல்ல படம் என்றும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment