close
Choose your channels

சூரிக்காக இணையும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், வெற்றிமாறன்.. இன்று ஒரு செம்ம விருந்து..!

Tuesday, May 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூரி நடித்த ’கருடன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற இருப்பதை அடுத்து இந்த விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

சூரி மற்றும் சசிகுமார் இணைந்து நடித்த ’கருடன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான நிலையில் அந்த வீடியோ வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் கதையில் உருவாகியுள்ள இந்த படம் சூரிக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

வெற்றிமாறன் இந்த படத்தின் கதை எழுதியவர் என்ற காரணத்தினால் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருமே சூரிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இந்த விழாவில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விழாவின் போது வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர்களின் பேச்சு ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை கே குமார் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment