சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும்போல: சிவகார்த்திகேயன் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் சிவகார்த்திகேயன், நாங்க இனிமேல் சங்கத்துக்கு இனி வேற செயலாளர் தான் பாக்கணும் போல’ என பதிவு செய்துள்ளார்.
நடிகர் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இருவரும் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கூட சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ படத்தில் சூரி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சூரிக்கு திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் சூரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘எதிர் நீச்சல் அடி, வென்று ஏற்று கொடி , ஆள் செமையா இருக்கீங்க, இனிமேல் ஃபுல்லா ஹீரோ தான், நாங்க சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பார்க்கணும் போல, என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என்று சிவகார்த்திகேயன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Ethir neechal Adi vendru yetru kodi ???????? aal semmaya irukeenga inimae fulla Hero dhan..naanga sangathukku vera seyalaalar dhan pakkanum pola?????? en Anbu annanukku iniya pirandhanaal nalvazhthukkal ❤️❤️always love u annan ????❤️❤️ https://t.co/iHIlHktwt8
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com