'தர்பார்' படம் குறித்து சிவகார்த்திகேயன் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இன்று முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கள் தியேட்டரில் வந்து ரசிகர்களோடு ரசிகர்களாக விசிலடித்து ரசித்து இந்த படத்தைப் பார்த்தது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்தது.
குறிப்பாக சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினி மற்றும் ராகவா லாரன்ஸ் சிவகார்த்திகேயன் உள்பட பலர் இந்த படத்தை பார்த்து ரசிகர்களோடு ரசிகர்களாக ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தர்பார் படத்தை இன்று முதல் நாள் முதல் காட்சி பார்த்த பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படம் குறித்து கூறியதாவது, ‘தர்பார்... ஒன் மேன் ஷோ... அவருடைய ஆற்றல், அவரது ஸ்டைல், அவரது வசீகரம் எப்போதும் ஊக்கமளிக்கிறது. ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத், நயன்தாரா மற்றும் மொத்த குழுவுக்கும் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
#Darbar #Thalaivar One Man Show ??his energy,his style,his charisma is ever inspiring ???? Best wishes to Super star @rajinikanth sir @ARMurugadoss sir @anirudhofficial #Nayanthara and entire team for a big success ????
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments