சேர்ந்து படம் பண்ணலாமா என்று கேட்ட பிரபல இயக்குனரை கலாயத்த சிவகார்த்திகேயன்!

சேர்ந்து படம் பண்ணலாமா என கேட்ட பிரபல இயக்குனரை நடிகர் சிவகார்த்திகேயன் நேரலையில் கலாய்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆன்லைன் மூலம் நேரலையில் ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்த நிலையில் இந்த நேரலையில் திடீரென கலந்து கொண்ட பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, அனுதீப் உங்களை டார்ச்சர் செய்தாரா? என்று கேட்டார். அதற்கு காமெடியாக பதில் சொன்ன சிவகார்த்திகேயனிடம், ‘நாம் 2 பேரும் சேர்ந்து எப்போது படம் பண்ணலாம்? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து பேசிய சிவகார்த்திகேயன், ‘எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம், கதையை எப்போது சொல்விங்க? என்று கேட்டதோடு, பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடிக்கும் அந்த படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் தனக்கு என்ன ரோல்? என்று கேள்வி எழுப்பி வெங்கட்பிரபுவை கலாய்த்தார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் விரைவில் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சிவகார்த்திகேயன் தற்போது ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவர் ‘அயலான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும், அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பசியில உள்ள மிருகத்துக்கு வேட்டை தெரியணும்ன்னு அவசியம் இல்லை: 'மைக்கேல்' டீசர்

விஜய் சேதுபதி நடிப்பில் ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் உருவாகி வரும் 'மைக்கேல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர்

படப்பிடிப்பு முடியும் முன்பே ரூ.80 கோடி வியாபாரமா? தனுஷ் அடுத்த படத்தின் ஆச்சரிய தகவல்!

 தனுஷ் நடித்து வரும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே அந்த படம் ரூபாய் 80 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் ஆகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 

விஜய்க்கு கதை சொல்லி இருக்கின்றேன்: ஒரே ஒரு படம் இயக்கிய இயக்குனர் தகவல்!

ஒரே ஒரு படம் இயக்கிய இயக்குனர் ஒருவர் விஜய்க்கு கதை கூறியிருப்பதாக கூறியிருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரிலீசாகும் முந்தைய நாளில் 'பிரின்ஸ்' படத்தில் செய்யப்பட்ட திடீர் மாற்றம்!

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று அந்த படத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 

2 பாகங்கள், 3 நாடுகள், 10 மொழிகள், 170 நாட்கள்: 'சூர்யா 42' படம் குறித்த ஆச்சரியமான தகவல்!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது